Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கனடா வேலைவாய்ப்பு மோசடி: 3 கோடி ரூபா சுருட்டிய மூவர் கைது – சிக்கியது எப்படி
இலங்கை

கனடா வேலைவாய்ப்பு மோசடி: 3 கோடி ரூபா சுருட்டிய மூவர் கைது – சிக்கியது எப்படி

ThanaBy ThanaApril 10, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்த மூவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து இவர்கள் சுமார் 3 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் ஏனைய சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை வைப்புச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, ஏனைய இரு சந்தேகநபர்களும் ஏப்ரல் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்று (09) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களைப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களைச் சேர்ப்பதும் பணம் வசூலிப்பதும் சட்டவிரோதமானது. இதற்கு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

எனவே, அனுமதிப்பத்திரம் பெற்ற முகவர் நிலையங்கள் அல்லாத வெளி நபர்களிடம் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாம் என வேலை தேடுவோரை பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஒருவரிடம் பணம் வழங்குவதற்கு முன்னர், அது குறித்து 1989 என்ற இலக்கத்தை அழைத்து பணியகத்திடம் தகவல்களைக் கேட்டறியுமாறும் மேலதிகமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.