இலங்கை, [12 ஏப்ரல் 2026] – நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மழை நிலவரம்:
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்: மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காலை வேளையில்: தென் மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பலத்த மழை: மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டமான நிலை:
மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியன் உச்சம் கொடுத்தல்:
சூரியனின் வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தினால், இன்று (12) நண்பகல் 12.11 மணிக்கு பின்வரும் பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது:
செட்டிக்குளம்
கெபித்திகொல்லேவ
கோமரன்கடவல
நிலாவெளி
பாதுகாப்பு எச்சரிக்கை:
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
