மலையக மக்களின் காணி உரிமை என்பது பிரஜைகளுக்குரிய மனித உரிமை.
இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஸ்கெலியாவில் இயங்கும் சிட்ப்ஸ் (SIDPS) எனும் தொண்டு நிறுவனமும், கலையின் ஊடாக சமூக மாற்றத்தை நோக்கி நகரும் கொட்டகலையை கேந்திரமாக கொண்டு இயங்கும் சங்கு கலைக்கழகம் (SANGU SKK) தொண்டு நிறுவனமும் இணைந்து விருத்தி மற்றும் unops நிறுவனத்தின் அனுசரணையில் 15, 16 மற்றும் 18ம் திகதிகளில் சாமிமலை ,நோர்வூட், ஸ்டோக்ஹோம், மாநெலு, பொகவந்தலாவ , லிந்துல, நாகசேனை, மேரேயா, பசுமலை, டயகம, அக்கரபத்தனை,மன்றாசி, உடபுசல்லாவ, நிதண்டஹினா, ராகலை, கந்தபளை, நுவரெலியா, நானுஓயா ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்கள் கிராமங்கள் தோட்டங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வைத்தார்கள்.
துண்டு பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்ட கோரிக்கைகளான.
Dithwa சூராவலியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாய பாதுகாப்பான இடங்களில் வீட்டு வசதிகளையும் அவர்களது பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தல்.
மலையக மக்களுக்கு வீடமை ப்பிற்க்காக பொருத்தமான காணி உறுதியுடன் குறைந்தது 20 பேர்ச்சேஸ் நிலைத்தை வழங்குதல்.
நாளாந்த சம்பள முறைக்கு பதிலாக நிரந்தர வாழ்வாதாரத் திற்க்கான புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.
அனைத்து தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கும் மேலதிகமாக தேவையான காணிகளை ஒதுக்கி அதனை அளவீடு செய்து தோட்டத்துறையில் இருந்து வேறுபடுத்தி கிராம கட்டமைப்பு முறையின் மூலம் அரச கட்டமைப்பின் கீழ் கொண்டு வருதல்.
அரச தோட்ட காணிகளை (JEDB, SLSPC மற்றும் எல்கடுவ) தனியாருக்கு வழங்குவதை நிறுத்தி அதை அங்குள்ள மக்களுக்கு வாழ்வதற்கும் வாழ்வாதாரத்திற்குமாக வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
தற்போது தோட்ட குடியிருப்புக்களில் பரம்பரையாக வாழும் மக்களுக்கு அவர்களுக்கும் அவர்களின் வழி வழி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற பல் வேறு கோரிக்கை முன் வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
