Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்
இலங்கை

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்

ThanaBy ThanaApril 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டத்தின் (Colombo Suburban Railway Project) கீழ் மின்சார ரயில் சேவையை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டம்

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் (Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம, கரையோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் திட்ட அமுலாக்கத்தின் போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தற்போதுள்ள ரயில் சேவைக்கு இணையாக மின்சார ரயில் சேவைகளை முன்னெடுப்பதுடன், தற்போதுள்ள அகலப் பாதைகளுக்கு (Broad Gauge) பதிலாக நியமப் பாதைகளாக (Standard Gauge) ரயில் தண்டவாளங்களை புனரமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இதன் போது ஆலோசிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் நிதி, போக்குவரத்து அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை வழங்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம்.

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.