செ.திவாகரன்
மே தின கூட்டங்களுக்கு ஆயத்தமாகும் தேசிய மக்கள் சக்தி – நுவரெலியாவில் நிகழ்வுகள் ஏற்பாடு
நாளை கொண்டாடப்படவுள்ள தொழிலாளர் தினத்திற்காக பிரதான அரசியல் கட்சிகளுடன்,பல அமைப்புக்களும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர்.
சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் நாளை (01) கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு நிகராக தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் நுவரெலியாவில் நடைபெற உள்ளது இதில் பேரணிகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடுகள் செய்துள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா கிரகரி வாவி அருகாமையில் முதலாவது வாகனத்தரிப்பிடத்தில் நடைபெறவுள்ளதுடன் குறித்த பகுதியில் பிரம்மாண்டமான மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
“மக்கள் ஆட்சிக்கு பலம்”
மே தினக் கூட்டம் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் எனவும் இதில் ஆரம்ப நிகழ்வாக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலை பகுதியில் இருந்து பேரணி ஒன்றும் ஏற்பாடுகள் செய்து நுவரெலியா பதுளை பிரதான வீதி வழியாக கிரகரி வாவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மேடை வரை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மே தின பேரணியிலும் கூட்டத்திலும் மலையக மக்கள் , தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்றும் மஞ்சுள சுரவீர ஆராச்சி மேலும் தெரிவித்தார்.
