Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் ‘குழந்தைகளின்’ எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன
இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் ‘குழந்தைகளின்’ எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன

ThanaBy ThanaMay 8, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.

செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 254 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6 மற்றும் 7) மீட்கப்பட்ட ஐந்து மனித எலும்புக்கூடுகளில் பெரும்பாலானவை சிறு குழந்தைகளினுடையது எனவும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதுவரை 254 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 259 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.”

புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களும் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“14 பிற பொருட்கள் இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 82 தொடக்கம் 96 வரையான பிற பொருட்கள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.”

அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் 27 ஏப்ரல் 2026 அன்று யாழ்ப்பாண நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமானது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரது வழிநடத்தலில் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் முதன்முறையாக 2025 மே 15ஆம் திகதி ஆரம்பமாகின.

45 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2025 செப்டம்பர் 06ஆம் திகதி மதியம் நிறைவடைந்த போது, மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 240 மனித எலும்புக்கூடுகளில் ஒன்றைத் தவிர அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

அனைத்து எலும்புக்கூடுகளும் அகழ்வாய்வுக் குழியில் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன.

அகழ்வாய்விள் இரண்டாம் கட்டத்தின் போது மீட்கப்படாத மனித எலும்புக்கூடு இன்னும் மீட்கப்படவில்லை எனவும், அது பாதுகாக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன், ஏப்ரல் 30, 2026 அன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட ஏனைய பொருட்களுள் பால் போத்தல், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பைகள், நாணயக் குற்றிகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளடங்குகின்றன.

28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சதொச மனிதப் புதைகுழியானது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக கருதப்படுகிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை வழங்கும் ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம்.

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.