மொனராகலை மாவட்டத்தில் திட்வா நட்டஈடு வழங்கியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தரும் விசாரணை நடவடிக்கைகளுக்கு வசதியாக வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரச்சாரப் பிரிவு
அரசாங்க தகவல் திணைக்களம்
