Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026

எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இன மத பேதங்கள் இன்றி, அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அபிவிருத்தியையும் ஜனநாயகத்தையும் நோக்கி அடியெடுத்து வைப்போம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இலங்கை

இன மத பேதங்கள் இன்றி, அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அபிவிருத்தியையும் ஜனநாயகத்தையும் நோக்கி அடியெடுத்து வைப்போம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ThanaBy ThanaJune 4, 2026No Comments4 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன மத பேதங்கள் இன்றி, அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அபிவிருத்தியையும் ஜனநாயகத்தையும் நோக்கி அடியெடுத்து வைப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அண்மைய ஐந்து வருட காலத்திற்குள் பல்வேறு சோகச் சம்பவங்களை எதிர்கொண்ட நமது நாட்டு மக்களுக்கு இப்போது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தாலும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை வலுப்படுத்த வேண்டிய தருணம் எம்முன்னால் காணப்படுகின்றன. எல்லா வகைகளிலும் சமூகத்தை வலுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக வலுப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாது, சமூகத்தில் உருவாகும் சிக்கலான நிலைமைகளை தீர்க்க மனித இனம் கைக்கொண்ட உயர்ந்த நிலையிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகள் தொடர்பில் மக்களை அறிவூட்ட வேண்டும். சமாதானமாகவும் ஐக்கியத்துடனும் புரிதலுடனும் நடந்து கொள்வது குறித்து மக்களை வலுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பல்வேறு சமூகப் பிரிவினர்களினது சமூக பின்னணிகளுக்கும், மதங்களுக்கும், கலாசாரங்களுக்கும் உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு வழங்க வேண்டிய அங்கீகாரத்தை உரியவாறு வழங்க வேண்டும். பரஸ்பர புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும். நமது நாட்டின் அரசியலமைப்பின் உச்சச் சட்டத்தில் நாம் அனைவரும் சமத்துவமானவர்கள் என குறிப்பிடப்படும்போது, அதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 9 மாகாணங்கள் 25 மாவட்டங்களிலும் வாழும் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த மக்கள் நட்புறவையும், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் முன்னிலைப்படுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஒவ்வொரு குடிமகனையும் சமத்துவமாக நடத்த வேண்டும். பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு மதங்களை விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். எங்கு வாழ்ந்தாலும், அனைவரின் இதயங்களிலும் ஒன்றாக வாழும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அனைவருக்கும் சௌபாக்கியத்தை உதயமாக்கும், அனைவரையும் இணைத்துக் கொண்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடந்த தேசிய சமாதான பேரவையின் 2026 வருடாந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

🟩 எந்த கருத்தை நாம் கொண்டிருந்தாலும் பேரிடர்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கையர்களாக ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் நாம் ஒன்றிணைவோம்.

பேரிடர்கள் ஒரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ இலக்கு வைத்து நடப்பதில்லை. ஆகையினால் இதனை மறந்து நாம் நடந்து கொள்ளக் கூடாது. நமது நாட்டு மக்கள் எந்த கருத்தைக் கொண்டிருந்தாலும் பேரிடர்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மனிதாபிமானத்துடன் முன்ந்து ஒன்றிணைகின்றனர். இந்த மனிதாபிமானம் பேரிடர்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமல்லாது எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்பட வேண்டும். இறையாண்மையையும், ஆள்புல ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதற்காக நாம் செயற்பட வேண்டும். இந்த எண்ணம் மக்கள் மனங்களில் இல்லாவிட்டால் நாடாக நாம் பாதுகாப்பற்றவர்களாகவே உணர்வோம். எனவே பிளவுபடாமல் இறையாண்மைப் பாதுகாத்து அனைவரும் நாட்டிற்காக கைகோத்து முன்நிற்க வேண்டும். வெறுப்பும் பழிவாங்கலும் உருவாகாத சமூக்க் கட்டமைப்பை, அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

🟩 அடக்குமுறைக்குப் பதிலாக பேச்சுவார்த்தைக்குச செல்வோம்.

பிரச்சினைகளைத் தீர்க்க அடக்குமுறைகளுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்தி இதன் மூலம் தீர்வுகளை எட்ட வேண்டும். நடுநிலையான நிலைப்பாட்டுக்கு வந்து நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அனைவரையும் ஒன்றிணைத்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 அனைவரையும் ஒன்றிணைத்த சௌபாக்கியத்தை நோக்கிச் செல்வோம்.

நமது நாட்டின் 9 மாகாணங்களும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பெற்றுத் தரும் பங்களிப்பை பார்க்கும்போது, மேல் மாகாணம் 42% ஆன பங்களிப்பைப் பெற்றுத் தருகின்றன. வடக்கு மாகாணம் 4% ஆன பங்களிப்பையும், கிழக்கு மாகாணம் 5% ஆன பங்களிப்புகளையும் பெற்றுத் தருகின்றன. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் தெளிவான ஏற்றத்தாழ்வுகள் தெரிகின்றன. இதனை சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். மேல் மாகாணத்தில் காணப்படும் வளங்கள் ஏனைய மாகாணங்களுக்கும் சென்று சேர வேண்டும். இதன் மூலமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியும் நியாயமும் கிட்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 பொருளாதார ரீதியாக நாம் பிளவுபட்டால் இறுதியில் எம்மத்தியில் வெறுப்பு தான் உருவாகும்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் குடும்ப அலகுகளின் வருமான மற்றும் செலவீன கணக்கெடுப்பு தரவுகளின்படி, தேசிய வருமானத்தில் செல்வந்த தரப்பு 20% க்கும் அதிக பங்கை அனுபவிக்கும்போது, ஏழ்மை நிலைக்குள் இருப்போர் 5% ஆன பங்கையே அனுபவிக்கின்றனர். இதுவும் ஒரு பிளவாகவே காணப்படுகின்றன. இன ரீதியாகவும், மத ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாம் பிளவுபட்டால், எம்மத்தியில் வெறுப்புகள் உருவானால் நாடாக எம்மால் முன்னேற முடியாது. நீதியினதும் நியாயத்தினதும் அடிப்படையில் நாடாக உற்பத்தி செய்யும் வளங்களை அனைவருக்கும் சமனாக பகிர்ந்தளிக்கும், பகிரக்கூடிய சௌபாக்கிய நிலையை நாமனைவரும் ஒன்றாய் இணைந்து உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 குரலற்ற பெரும்பாலான மக்களுக்கு நாம் குரலாக இருப்போம்.

குரலற்று, அமைதி காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் சார்பாக நாம் அனைவரும் முன்நிற்க வேண்டும். அரசியல் அதிகாரமில்லாது, குறைந்த பொருள் வளங்களோடு இருக்கும் இவர்களுக்காக உண்மையாக நாம் முன்நிற்க வேண்டும். இவர்களுக்காக வேண்டி தேசிய நிகழ்ச்சி நிரலொன்றை வகுக்க வேண்டும். பங்கேற்பு மற்றும் ஜனநாயகம் வழியாகவே ஒரு நாடு முன்னோக்கிச் செல்லும். ஆகையினால், நடைமுறையில் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கி நடந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மை சிறுபான்மை என்ற விடயங்களை மறந்து, ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 முற்போக்கு தேசியவாதத்தை (Postive Nationalism) முன்னிலைப்படுத்தி நடந்து கொள்வோம்.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, இதற்கு தடைகளாக அமைந்து காணப்படும் விடயங்களை நீக்கி, அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு, பொதுவான கருத்து நிலைப்பாட்டை நோக்கி நாம் செல்ல வேண்டும். முற்போக்கு தேசியவாதத்தை மையமாக கொண்டு நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

    October 13, 2026

    ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

    October 13, 2026
    Editors Picks

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026

    ​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

    October 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.