Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

July 21, 2026

பரபரப்பான ஹட்டன் நகர்: அனுமதியற்ற கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு!

July 21, 2026

2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

July 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாகாண சபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் மாற்றம்! பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு?
இலங்கை

மாகாண சபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் மாற்றம்! பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு?

ThanaBy ThanaJuly 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை மாகாண சபைத் தேரர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக தற்பொழுது காணப்படும் விகிதாசார முறை மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றாமல் வைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்தத் தேர்தல் முறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் எழக்கூடிய சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்துக் குழு விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஆய்வுக்குப் பின்னர் எதிர்காலக் கூட்டத்தில் இவ்விடயத்தை மீண்டும் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 33% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக வலியுறுத்தியது.

இதற்கமைய, தொடர்புடைய தேர்தல் வழிமுறைகளை வகுக்கும்போது இந்தக் கொள்கை முடிவு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

    July 21, 2026

    2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

    July 21, 2026

    மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்திய எல்.பி.எல். ‘பிங்க் மெட்ச்’

    July 21, 2026

    ராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

    July 21, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

    July 21, 2026

    பரபரப்பான ஹட்டன் நகர்: அனுமதியற்ற கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு!

    July 21, 2026

    2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

    July 21, 2026

    மாகாண சபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் மாற்றம்! பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு?

    July 21, 2026

    நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

    July 21, 2026

    பரபரப்பான ஹட்டன் நகர்: அனுமதியற்ற கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு!

    July 21, 2026

    2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.