கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், கம்பவாரி ஜெயராஜை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நல்லாசி பெற்றார்.
இதன்போது, தனது இந்திய விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பில் செந்தில் தொண்டமான் கம்பவாரி ஜெயராஜிடம் விளக்கமளித்தார்.
மேலும், கம்பவாரி ஜெயராஜால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆன்மீகம் மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இன்றைய சமூகத்திற்கு மிகவும் அவசியமானவை என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு சமூக மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பிலும் கம்பவாரி ஜெயராஜிடம் செந்தில் தொண்டமான் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்.
