கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து கீழே விழுந்து 12 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
14 மாடிகளைக் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் (Rooftop) அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், குறித்த சிறுவன் ஏனைய சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே தவறி கீழே விழுந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மருதானை காவல்துறையினர் (Maradana Police) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
