இருபதாயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் எதிர்வரும் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக, இந்த இலஞ்சப் பணம் கோரிப் பெறப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபரிடம் இருந்த உண்மையான போதைப்பொருள் விவகாரத்தை மறைத்து, 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மாத்திரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து சிறிய தண்டனை பெற்றுக்கொடுக்கவும், எதிர்காலத்தில் அவருக்கு இடையூறின்றி செயற்பட வழிவகுக்கவும் இந்தத் தொகை பெறப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் திகதி, குறித்த பொலிஸ் பரிசோதகர் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தினுள் வைத்தும், பொலிஸ் கான்ஸ்டபிள் கல்முனைப் பகுதியிலும் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களைக் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளஇலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் து.
