பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் செயற்படுத்தப்படும் 2026 உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளினை முன்னிட்டு கொட்டகலை ஈர நில பூமியில் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் , உறுப்பினர்களான சிவசாமி பத்மநாதன் அவர்கள், கணபதி கண்ணதாசன் , அமித்த ஆனந்த , கோவிந்தராஜ் நேசமலர் , ரசிக்கா ஜீவனி , விஜயசீலன் சுதர்சன் , செயலாளர் சிவராம் ராஜவீரன் அவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என்போர் கலந்துகொண்டனர்.

