முன்னாள் முதன்மைப் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் இணைந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தின் மூலம் இவர்கள் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ள நிலையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.
