இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக ஞானசார தேரருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
