Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*
இலங்கை

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

ThanaBy ThanaOctober 15, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

*யாழ்ப்பாணத்தில் 257 வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு*

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அனைவருக்கும் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு, வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்த 257 பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (14) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்த அமைச்சர், அவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.

இதன்போது, சொந்த வீடுகளை அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காகப் பயனாளிகள் தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தமக்கு நம்பிக்கையளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், மக்களின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்த்து அவற்றுக்குத் தீர்வுகளை வழங்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த மக்களின் வாழ்க்கையில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

முன்னர் வீட்டுத்திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது ஒரு வீட்டுக்கு 20 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடமைப்புப் பணிகளை நிறைவு செய்வதில் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்ட குடும்பங்களுக்குப் பெரும் உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்தின் கீழ் 833 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்த 257 பயனாளிகளுக்கே இம்முறை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேலும் 281 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில் குறித்த திட்டங்களின் கீழ் மொத்தமாக 1,114 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மக்களின் வரிப்பணம் மக்களின் நலனுக்காக உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர், மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வீட்டுத்திட்டப் பயனாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

க.கிஷாந்தன்

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரின் ஊடக செயலாளர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.