ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, அவரிடமிருந்து 1 கிலோகிராம் 45 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1 கிலோகிராம் 86 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு மின்னணுத் தராசு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8 இலட்சத்து 50,000 ரூபாய் பணம் மற்றும் ஒரு கைபேசி என்பனவும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
