கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை அங்கிருந்து அகற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அறிவிக்கச் சென்ற கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
விஹாரமஹாதேவி பூங்காவில் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடைசெய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாருடன் ஏற்பட்ட முறுகல் நிலையால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
