மானிப்பாய் பண்டத்தரிப்பில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம்*
யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தின் பண்டத்தரிப்புப் பகுதியில் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், அலுவலகங்களின் இணைப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
க. கிஷாந்தன்
ஊடகச் செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு
