மாத்தளை மாவட்ட இளைஞர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில், CITHE Campus மற்றும் அயலக பழைய மாணவர் சங்கம் மாத்தளை ஆகியன இணைந்து விசேட திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாத்தளையில் கைச்சாத்திடப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்த தகுதியுடைய மாணவர்களுக்கு ‘Diploma in English Language’ கற்கைநெறி இலவசமாக வழங்கப்படவுள்ளது.
பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் கல்விச் செலவுகளை நலன்விரும்பிகள் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
