Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு அடுத்த சில வாரங்களில் 1,996 வீடுகள் நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம்
இலங்கை

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு அடுத்த சில வாரங்களில் 1,996 வீடுகள் நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

ThanaBy ThanaMarch 7, 2023Updated:March 7, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு அடுத்த சில வாரங்களில் 1,996 வீடுகள் நிர்மாணிக்க சீனாவுடன் ஒப்பந்தம்.

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிக்க சீனாவுடனான ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் செய்து முடிக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடிப்படை திட்டங்கள் ஏற்கனவே வரையப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அந்த அதிகாரசபை கூறியது.

இதற்கான ஆரம்ப ஒப்பந்தம் அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையில் கைச்சாத்திடப்பட்டது. சீன அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் சீன அரசாங்கத்தின் மத்திய தெற்கு கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவன கூட்டுத்தாபனத்தின் செயலாளர்  ஷென் தாவோ ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அமைச்சரின் முயற்சியின் கீழ், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அதற்கான திட்டங்களைத் தயாரித்து வருகிறது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன அரசாங்கம் 552 மில்லியன் யுவான் (29 பில்லியன் ரூபாய்) உதவியை வழங்கவுள்ளது. இந்த வீட்டுத் திட்டங்கள் 5 இடங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளன. அதற்காக பேலியகொட, தெமட்டகொட, கொட்டாவ, மஹரகம, மொரட்டுவ ஆகிய நகரப் பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த 5 வீட்டுத் திட்டங்களில் கொட்டாவ வீடமைப்புத் திட்டம் நாட்டின் மூத்த கலைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 108 ஆகும். ஒரு வீட்டின் அளவு 750 சதுர அடி. மற்ற 4 திட்டங்களும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு, கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1,888 ஆகும். இங்கு ஒரு வீடு 530 சதுர அடிகளைக் கொண்டது. இவ்வருட இறுதிக்குள் இங்கு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி. பிரியசாந்த, மேலதிக திட்டப்பணிப்பாளர் நிஹால் திஸாநாயக்க மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்
2023.03.07

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.