அனைத்து ரயில்வே திணைக்கள ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக ரயில்வே திணைக்கள ஊழியர்கள் இன்று (14) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந் நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு போக்குவரத்து அமைச்சிடம் இருந்து வந்துள்ளது.
