வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் வட்டுக்கோட்டை, சங்கரத்தை அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில்

சங்கரத்தை இருந்தருளும் மாமணியே
தஞ்சமென்று உன்னடியே சரணடைந்தோம்
அஞ்சவரும் தீமைகளைத் தடுத்திடம்மா
நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா

எங்கும் நிறைந்தருளும் மாமணியே
வரம் கேட்டு உன்னடியே சரணடைந்தோம்
வஞ்சனைகள் அண்டாது தடுத்திடம்மா
நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா

தங்கத் திருவுருவைக் கொண்டவளே மாமணியே
பங்கமில்லா உன்னடியே சரணடைந்தோம்
பஞ்சநிலை அண்டாது தடுத்திடம்மா
நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா
வயல்வெளியின் மத்தியிலே கோயில் கொண்ட மாமணியே
பயம் போக்க உன்னடியே சரணடைந்தோம்
நெஞ்சமதில் நிம்மதியைத் தந்திடம்மா
நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா
பத்திரகாளி அம்மனென்ற பெயர் பூண்ட மாமணியே
பாசமுடன் உன்னடியே சரணடைந்தோம்
நேசமுடன் வாழும் வழி தந்திடம்மா
நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா
கேட்டவரம் தந்தருளும் மாமணியே
கேடுகளைத் தடுத்திடவே உன்னடியே சரணடைந்தோம்
கலக்கமில்லா மனம் கொண்டு வாழும் வழி தந்திடம்மா
நம்பியுன்னை இறைஞ்சுகின்றோம் உடனிருப்பாய் காளியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
