வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- அனலைதீவு அருள்மிகு சங்கரநாதர் மகா கணபதிப் பிள்ளையார் திருக்கோயில்

எங்கும் எதிலும் என்றும் வந்துறையும் எங்கள் கணபதியே
ஏற்றமிகு நல்வாழ்வை எமக்களிக்க கருணை செய்வாய்
என்றும் உடனிருந்து வழிகாட்டி விட்டிடைய்யா
அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே

தீவகத்தில் வீற்றிருந்து திசையெங்கும் காக்கின்ற கணபதியே
தீராத துன்பங்களைத் தீர்த்தெமக்கு கருணை செய்வாய்
என்றும் உடனிருந்து காத்து அருளிடைய்யா
அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே

அலைகடல் சூழ் தீவினிலே அமர்ந்தருளும் கணபதியே
அச்சமில்லா பெருவாழ்வை எமக்களிக்க கருணை செய்வாய்
என்றும் உடனிருந்து எம்நிலையை உயர்த்தி விட்டிடைய்யா
அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே
நம்பிக்கை தந்தெம்மை வாழ வைக்கும் கணபதியே
நிம்மதியை என்றும் எமக்களிக்கக் கருணை செய்வாய்
என்றும் உடனிருந்து துணிவைத் தந்திடைய்யா
அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே
வேழமுகம் கொண்டு வேதனைகளையும் கணபதியே
வேதனைகளில்லாத பெருவாழ்வை எமக்களிக்கக் கருணை செய்வாய்
என்றும் உடனிருந்து ஆறுதலைப் பெருக்கிடைய்யா
அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே
ஏழைப் பங்காளனாய் எங்குமுறை கணபதியே
எழுச்சிமிகு வளவாழ்வை எமக்களிக்க கருணை செய்வாய்
என்றும் உடனிருந்து மனவுறுதி காத்திடைய்யா
அனலைதீவு கோயில் கொண்ட சங்கரநாதப் பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
