தென்மாகாணம் – மாத்தறை மாவட்டம், தெவிநுவர (தேவேந்திர முனை) அருள்மிகு தொண்டீசுவரத் திருக்கோயில், இன்று விஷ்ணு கோயிலாக மாற்றமடைந்துள்ளது

அலை மோதும் பெருங்கடலின் அருகமைந்த கோயில்
பஞ்சேஸ்வரங்களில் ஒன்றாகப் பெருமை கொண்ட கோயில்
ஆதிமுதல் சிவனார் காட்சி தந்த கோயில்
தேவேந்திர முனையிலிருந்த பழம் பெரும் சிவன் கோயில்

விஜயனுடன் வந்திட்ட உபதிஸ்ஸன் வழிபட்ட கோயில்
வரலாற்றில் நம்மிருப்பைப் பதிவிட்ட கோயில்
தென்னிலங்கைக் கரையினிலே இருந்திட்ட கோயில்
தேவேந்திர முனையிலிருந்த பழம் பெரும் சிவன் கோயில்

பறங்கியர்கள் சிதைத்தழித்த பழமை மிகு கோயில்
அறம் காத்து மறமழிக்கும் ஐயன் திருக்கோயில்
காக்கும் கடமை கொண்ட திருமால் உறை கோயில்
தேவேந்திர முனையிலிருந்த பழம் பெரும் சிவன் கோயில்

தொண்டீஸ்வரம் என்ற பெயர் கொண்ட கோயில்
தொல்லை அறுத்தெறிந்து சுகமளிக்கும் திருக்கோயில்
தொன்மைமிகு வரலாற்றுக்குரித்துடைய கோயில்
தேவேந்திர முனையிலிருந்த பழம் பெரும் சிவன் கோயில்

மூத்தபிள்ளை விநாயகரும் உறைகின்ற கோயில்
முத்தமிழர் முன்னிருப்பை வெளிப்படுத்தும் கோயில்
வரலாற்றில் தமிழர் நிலை உறுதி செய்யும் கோயில்
தேவேந்திர முனையிலிருந்த பழம் பெரும் சிவன் கோயில்
திருமாலுக்கிடமளித்த சீர்மைமிகு கோயில்
எங்கள் சிவன் இருந்தருளும் இனிய எங்கள் கோயில்
வளம் கொண்ட எதிர்காலம் எமக்காக்கும் கோயில்
தேவேந்திர முனையிலிருந்த பழம் பெரும் சிவன் கோயில்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
