கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு கும்பத்துமால் கருமாரியம்மன் திருக்கோயில்

தாயே கருமாரி கருணைமிகு மாமணியே
தஞ்சமென்று உன்பாதம் சரணடைந்தோம்
நாடிவரும் துன்பங்களைக் களைந்தெறிய
கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா

தாயாக இருந்துலகைக் காக்கின்ற மாமணியே
சஞ்சலங்கள் போக்கிவிட நம்பிவந்தோம்
எம்குறைகள் எல்லாமே களைந்தெறிய
கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா

காவல் தெய்வமாயிருந்து வழிகாட்டும் மாமணியே
மகிழ்ச்சி நாடி உன்பாதம் தொழுகின்றோம்
வஞ்சனைகள், சூழ்ச்சிகள் அண்டாது களைந்தெறிய
கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா
அதர்மம் அழித்தொழிக்க அவதரிக்கும் மாமணியே
அச்சம் அகற்றி விட உன்னையே நாடிவந்தோம்
தோல்விகள் துரோகங்கள் அண்டாது களைந்தெறிய
கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா
கிழக்கிலங்கை கோயில் கொண்டு கோலோச்சும் மாமணியே
எழுச்சி பெற்று நாம்வாழ உன்பாதம் தொழுகின்றோம்
வீழ்ச்சிகளும், தாழ்ச்சிகளும் அண்டாது களைந்தெறிய
கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா
திருமலை நகரினிலே காட்சிதரும் மாமணியே
திருப்தியென்றும் அடைந்திடவே உன் பாதம் பற்றுகின்றோம்
தொல்லைகளும், தீமைகளும் அண்டாது களைந்தெறிய
கும்பத்துமால் கருமாரியம்மா எமக்கென்றும் அருளிடம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
