வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், அளவெட்டி அருள்மிகு பசுபதீசுவரர் சிவன் திருக்கோயில்

அணுவுக்குள் அணுவாயிருந்து அகிலமாளும் பெருமானே
அமைதி நிறை மனத்துடனே நாம் வாழ கருணை செய்வாய்
உன்பாதம் பணிகின்றோம் எமக்கு என்றும் அருளிடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே

அருவுருவாய், ரூபமாய் காட்சிதரும் பெருமானே
அன்பு நிறை மனத்துடனே நாம் வாழ கருணை செய்வாய்
மனமுருகிப் பணிகின்றோம் எம்குறைகள் தீர்த்திடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே

அச்சம் தடுத்தெம்மை ஆட்கொள்ளும் பெருமானே
அல்லல் இல்லா சூழலிலே நாம் வாழக் கருணை செய்வாய்
நம்பிவந்து அடிபற்றும் எமக்கு என்றும் அருளிடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே
அளவில்லா நற்கருணை அளிக்கின்ற பெருமானே
அரவணைப்பு பெற்று நாம் வாழக் கருணை செய்வாய்
அடிபணிந்து நிற்கும் எமக்கு என்றும் அருளிடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே
அதர்மத்தை அழித்தொழித்து அறங்காக்கும் பெருமானே
அவாவில்லா மனநிலையில் நாம் வாழக் கருணை செய்வாய்
வரம் கேட்கும் எமக்கு என்றும் அருளிடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே
அல்லல் நீக்கியெம்மை வாழவைக்கும் பெருமானே
அவதியில்லா மனத்தினராய் நாம் வாழக் கருணை செய்வாய்
துணையாக இருந்தெமக்கு என்றும் அருளிடைய்யா
அளவெட்டியில் கோயில் கொண்ட பசுபதீசுவரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
