முன்னாள் தேசிய கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட்டிற்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவராக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜயசூரியவுடன் குழுவின் உறுப்பினர்களாக பர்வீஸ் மஹரூப், சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.
முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மஹேல ஜயவர்தன தலைமையில் இதேபோன்ற குழுவை நியமித்து இருந்தார். ஆனால் கடந்தாண்டு நாமல் ராஜபக்ஷ தனது பதிவியை ராஜினாமா செய்ததை அடுத்து அது கலைக்கப்பட்டது.
