இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 236 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
