வி.தீபன்ராஜ்
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டி யிலிருந்து நுவரெலியாவிற் பசலை (கோழி உரங்களை)ஏற்றி பயணித்த லொறியொன்று பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் விழுந்துள்ளது
விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர் எனினும் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த லொறியில் ஏற்பட்ட தொழினுட்ப கோராறு காரணமாகவே வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது என மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
