கம்பளை – எல்பிட்டிய பகுதியில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த 22 வயதான பெண்ணின் ஜனாசா தோண்டியெடுக்கப்பட்டது.

ஃபாதிமா முனாவ்ரா என்ற குறித்த பெண், கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

அவர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவரை கொலை செய்த சந்தேகத்தில் ஒருவர் கைதானார்.

குறித்த நபர் தமது கொலையை ஒப்புக்கொண்டு வட்சப் குரல் பதிவு ஒன்றை அனுப்பியதன் பின்னர் பொலிசாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
அவர் காட்டிய இடத்தில் புதைக்கப்பட்டிருந்த ஃபாதிமா முனவ்ராவின் ஜனாசா தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
