அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதியில் சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தால் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பணத்தை மோசடியான முறையில் முறைகேடு செய்துள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
