காலி மாவட்டத்தில் பொழியும் அதிக மழை காரணமாக நேற்று (15) நண்பகல் வரை, பிரதேச செயலகப் பிரிவின் 7 இடங்களில் வாழும், 95 குடும்பங்களில் 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது பெய்யும் மழையினால் நெலுவ தவளம உட்பட பல இடங்களில் தாழ்ந்த பகுதிகள் மற்றும் பிரதான வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியிருப்பதால் வாழ்க்கையின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தவளம பிரதேசத்தில் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நெலுவ, நாகொட பத்தேகம, ஹிக்கடுவை, கரந்தெனிய மற்றும் கோன்பீனுவல பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிக மழை, வெள்ளம், மண்சரிவு மற்றும் பாரிய மரங்கள் வீழ்தல் போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
பகுதியளவில் 29 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டு முற்பணம் செலுத்துவதற்கு ஒதுக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உடனடி அனர்த்த நிவாரண சேவை செயற்பாடுகளுக்காக மாவட்ட செயலாளரின் தலைமையில், சகல பிரதேச செயலகங்கள் பணிகளுக்காக ஆயத்தமாகியுள்ளன. தேவைக்கு ஏற்ப சமைத்த உணவு வழங்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவசர அறிவித்தலுக்காக நெலுவ மற்றும் தவளம பிரதேச செயலக அலுவலகங்களில் பாதுகாப்பு பிரிவின் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மழை வீழ்ச்சி தொடருமாயின், காலி மாவட்டத்தின் தாழ்ந்த பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களைக் கோரியுள்ளது.
அவசர அனர்த்த நிலைமைகளின் போது 0912227315 என்ற காலி மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
