Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

October 14, 2026

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

October 14, 2026

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

October 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியாவில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மலையகம் 200 நிகழ்வு
மலையகம்

நுவரெலியாவில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மலையகம் 200 நிகழ்வு

ThanaBy ThanaMay 19, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையகம் -200 என்ற தொனிப்பொருளின் கீழ் வெள்ளிக்கிழமை 19 சனிக்கிழமை 20 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆகிய தினங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெறுகின்றது.

மலையகத்தின் 200 வருடகால வரலாற்றை நடமாடும் அருங்காட்சியகம் ஊடாக 25 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

 

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை அண்மித்துள்ளது.

காலம் மாறினாலும் மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்றும் திருப்தியளிக்க கூடிய அளவுக்கு முன்னேற்றமடையவில்லை. கல்வி,சுகாதாரம்,அரசியல் ஆகிய அடிப்படை காரணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

 

இருப்பினும் லயன் வாழ்க்கை இன்றும் ஒரு நினைவு சுவடாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், 200 ஆண்டுகாலத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை 19, சனிக்கிழமை 20 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆகிய திகதிகளில் நுவரெலியா மாவட்டத்தில் ‘மலையகம் -200’ என்ற தொனிப்பொருளின் கீழ் விசேட மூன்று நாள் நிகழ்வு இடம்பெறுகிறது.

 

கடந்த 200 ஆண்டுகாலமாக மலையக மக்கள் கடந்து வந்த பாதைகள், நிகழ்கால தன்மை மற்றும் எதிர்கால அபிலாசைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த மூன்று நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட இராஜதந்திரிகளுககு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

3 நாள் செயற்திட்ட நிகழ்வில் மலையகத்துக்கான எதிர்காலம் தொடர்பில் விரிவான கருத்தாடல் இடம்பெறவுள்ளது. அத்துடன் 21 ஆம் திகதி பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.

 

மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை சுவடுகளை எடுத்துக்காட்டும் வகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு தேசிய நூதனசாலைக்கு அருகில் நடமாடும் அருங்காட்சியகத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை நாடமாடும் அருங்காட்சியகத்தை 25 மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு

    October 14, 2026

    நாட்டை அண்மித்த கடற்பகுதியில் நிலவும் கொந்தளிப்பான வானிலை – நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை!

    October 14, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

    October 13, 2026
    Editors Picks

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026

    கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

    October 14, 2026

    நாடு முழுவதும் பலத்த மின்னல் எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு!

    October 14, 2026

    இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

    October 14, 2026

    பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.