Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » காவல் நிலையத்தில் மரணமான பதுளை பெண்; விசாரணைகள் சிஐடிக்கு மாற்றம்.
இலங்கை

காவல் நிலையத்தில் மரணமான பதுளை பெண்; விசாரணைகள் சிஐடிக்கு மாற்றம்.

ThanaBy ThanaMay 20, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை காவல்துறையின் நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மூன்று அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெலிக்கடை காவல்துறை பொறுப்பதிகாரியை பணியிடை நீக்குவதா? அல்லது இடமாற்றம் செய்வதா? என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

பதுளையைச் சேர்ந்த 42 வயதான குறித்த பெண், தாம் பணியாற்றிய வீட்டில் இடம்பெற்ற தங்க ஆபரண திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11ஆம் திகதி வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

குறித்த வீட்டின் உரிமையாளரான தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பெண் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு பணியாற்றிய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தினத்தன்று அவர் வெலிக்கடை காவல்துறை நிலையத்தில் வைத்து, உடல்நலக் குறைவுக்கு உள்ளானதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் மரணித்திருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், தமது மனைவியின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என்றும், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி குறித்த பெண்ணின் கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெலிக்கடை காவல்துறை சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணம் முன்வைத்துள்ளது.

இதன்போது, மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வேறொரு உயர் அதிகாரிக்கு பொறுப்பளிக்குமாறு கோரியுள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்படும்போது, காவல்துறையால் தடுத்து வைக்கப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் பேணப்படுகின்ற நிலையில், அந்தப் பட்டியலை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், குறித்த பெண்ணின் பெயர் வெலிக்கடை காவல்துறையின் தடுத்து வைக்கப்படுபவர்களின் பெயர்ப்பட்டியலில் பதியப்படவில்லை என வெலிக்கடை காவல்துறை நேற்றைய தினம் மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.

Arrested Badulla House Maid lk Lka Malayagam Malayagamlk Murder Police Sri Lanka Upcountry Welikada இலங்கை கைது செய்தி தேட்டத்தொழிலாளர் மலையகம்
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.