மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.21.05.2023.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரவுன்சீக் தோட்ட பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் மஸ்கெலியா பொலிசாரின் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு, இன்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 24 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பணித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 20.05.2023 மஸ்கெலிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புரையின் படி, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் புரவுன்சீக் தோட்ட பகுதியில் சுற்றி வளைப்பினை மேற்கொண்டபொழுது சட்ட விரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அகழ்வின் போது அங்கு அகழ்விற்காக பயன்படுத்திய ஆயுதம் மற்றும் கூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும் 24.05.2023 அன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி பணித்து உள்ளதாக அவர் கூறினார்.
