வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
கடந்த மே மாதம் இரண்டு நாட்கள் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
எனினும் அவற்றில் முன்னேற்றங்கள் இல்லாத சூழ்நிலையில், இன்று ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
