அறுகம்பே உல்ல கடற்கரையில் நீராட சென்ற மூவர் காணாமல் போன நிலையில் விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த மூவரை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 40 வயது உடைய பெண் ஒருவரும் 11 வயது சிறுவனும் 17வயதுடைய இளைஞனும் இவ்வாறு காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.