“International Diplomats” எனப்படும் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ராஜதந்திரிகள் மாநாடு இம்முறை இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றது. இதில் “International Diplomats” இன் Head of Ambassadors ஆகவும் மலையக கலாசார ஒன்றியத்தின் செயலாளர் ரகு இந்திரகுமார் கலந்து கொண்டு
ஜெர்மனி சார்பில் இலங்கையனாக உரையாடினார். இதில் பசியின்மை குறித்த விவாதம் நடைப்பெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த இளம் தலைவர் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான பிரதிநிதிகள் ஆசிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்ததோடு சர்வதேச நாடுகளிலிருந்தும் பல பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

