சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் மின்சாரம் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று(06.07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் காரணமாக 50,000க்கும் மேற்பட்ட நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் செயற்பாடுகளில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
