தன்னுடைய வழக்கு விசாரணையை ஜூரியின்றி நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க, சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனுஷ்கவின் சட்டத்தரணிகள் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கை நீதிபதி முன்னிலையில் மட்டுமே விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கும் வரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
