உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.
இந்த போட்டியில் இலங்கை அணியும் நெதர்லாந்து அணியும் ஹராரே மைதானத்தில் மோதிய நிலையில், நாணய சுழற்சியில் நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றது.
எனினும் அந்த அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஷான் ஆராச்சிகே அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும், குஷால் மெண்டிஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சாா்பில் லோகன் வான் பீக் ,ரேன் கெளின் ,விக்ரமிட் சிங் சாஹிப் ஸுலிஃப்கர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 23.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
நெதர்லாந்து அணி சாா்பில் மெக்ஸ் O’Dowd அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சாா்பில் மகேஷ் தீக்ஷஷன 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
