அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற மற்றுமொரு பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பன்பொல பகுதியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் கூரகலை யாத்திரை சென்று திரும்பிய பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆண் அம்பன்பொல வைத்தியசாலையிலும், மேலும் 18 பெண்களும் நான்கு ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
