வெல்லவாய தனமல்வில வீதியில் தெள்ளுல்ல கொலனி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (14) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரின் மகள் படுகாயமடைந்துள்ளது.

படுகாயமடைந்த மகள் ஹந்தபனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றது
தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த சிறிய லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நீராடுவதற்காக வீதியில் பயணித்த தாயும் மகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
தெள்ளுல்ல கொலனி அட்டாலிவெவ பகுதியை சேர்ந்த 62 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
.
லொறியின் சாரதி ஊவா குடாஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
சாரதி நாளைய தினம் வெள்ளவாய நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஊவா குடாஓய பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா