நபர் ஒருவரை தடுத்து அறையில் வைத்துவிட்டு பணம் உந்துருளி கையடக்க தொலைபேசி ஆகியன கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட்ட மூவரை சந்தேகத்தின் பேரில் கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் இருந்து 80000ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்ற பட்டுள்ளதுடன் உந்துருளி மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் மிட்கப்பட்டுள்ளதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்
அத்தேடு கைது செய்யப்பட்டவர்கள் மையாங்கனை மற்றும் கிராந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 25.34வயதுடைய நபர் எனவும் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர் வவுனியா இராணுவ முகாமில் கடமையாற்றும் நபர் எனவும் கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர்களை மையாங்கனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்
ராமு தனராஜா
