இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது போட்டி நிறைவடையும் நேரத்துக்கு முன்னதாகவே மழை காரணமாக முடிவு பெற்றுள்ளது.
மழை ஆரம்பமாவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியானது தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றிருந்தது.
சவுத் ஷகீல் 69 ஓட்டங்களுடனும், ஆகா சல்மான் 61 ஓட்டங்களுடனும் ஆட்மிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூரிய 3 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
காலி சர்வதேச மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸுக்காக 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.
