கொழும்பு 15 அழுத்மாவத்தையில் அருள்பாலிக்கும் அகில இலங்கை ஸ்ரீ ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் 23வது வருடாந்த தேர் திருவிழா இடம்பெறவிருக்கின்றது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் சபரிமலை தர்மசாஸ்தாவின் ஸ்ரீ ஐயப்ப அவதாரமாக
அருள் பாலிக்கும் ஆலயமாக இலங்கை திருநாட்டில் அழுத்மாவதையில் அருள் சுரக்கும் ஆனந்த ஐயப்பா சுவாமியின் வருடாந்த தேர் திருவிழா நிகழும் சோபகிருதி வருடம் ஆடி மாதம் 9ம் நாள் செவ்வாய்கிழமை (25.07.2023) அன்று சப்தமி திதியும் சித்திரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 5.45 மணிக்கு
மஹாகணபதிஹோமாம், அஷ்டாபிஷேகம் நடைபெற்று மாலை 5.30 மணிக்கு
ஆச்சார்யவரணம் கொண்டு கொடியேற்றதோடு திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து ஐந்து நாட்களும் ஆனந்த ஐயப்பனுக்கு கேரளா தர்மசாஸ்தா சன்னிதானத்தில் நடைபெறும் .ஆகம விதிமுறை கேற்ப விஷேட பூஜைகளோடு, சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படி பூஜைகளும் இடம் பெற்று 6ம் நாளான ஞாயிற்று கிழமை 30.07.2023 அன்று
காலை கணபதி ஹோமாம், அஷ்டாபிஷேகம், திருபள்ளி எழுச்சி, ஆராட்ட்
டை தொடர்ந்து காலை 9.00 மணிக்கு ஆனந்த ஐயப்ப சுவாமி தேர்ரேறிஅழுத் மாவத்தை வீதியோடு முகத்துவாரம் காவல் நிலைய வழியாக ஸ்ரீ மகா விஷ்ணு கோவிலை சென்றடைந்து ,
மட்டுகுளி விஸ்வைக் சுற்று வட்டதினுடக மீண்டும் தேர் அழுத்மாவத்தை வழியாக ஆலயத்தை வந்தடைவதோடு ,அன்று பகல் விஷேட பூஜா வழி படுகளோடு கொடியிறக்கம், கலசாபிஷேகதை தொடர்ந்து திருவிழா இனிதே நிறைவுப் பெறும். அணைத்து பக்த அடியார்களையும் ஆலய விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு ஐயனின் பூரண ஆசியை பெற்றுக் கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபை கேட்டு கொள்கின்றது.
விக்கி
