பதுளை பிரபல பாடசாலைகள் இரண்டின் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்களும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் இருவர் பாடசாலை முடிந்து வீடு செல்லும் போது பதுளை நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வெளேகட பகுதியில் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் மாணவர் ஒருவரினால் சக மாணவன் தடியால் தாக்கிய போது வலது காதில் பாரிய காயம் ஏற்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனுக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சிகிச்சையின் பின்னர் வாட்டு இலக்கம் 27 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு தாக்கிய மாணவனும் பதுளை பொது வைத்தியசாலையில் வாட்டு இலக்கம் 8ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவித்தனர்.
காதல் விவகாரமே மோதலுக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
