கொட்டகலை பிரதேசத்திலுள்ள ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம்.
மாணவர்கள் தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர் அந்த தொழிலை தனது கையிலெடுத்ததன் விளைவாக மாணவர்களின் தலை அலங்கோலமாகியுள்ளது.
எமது சமூகத்தின் நிலையை உணர்ந்து ஆசிரியர் பெற்றோர்களை அழைத்து தலைமுடியை வெட்டுவதற்கு ஆலோசனை வழங்கியிருக்க முடியும். அல்லது பக்கத்திலுள்ள முடி திருத்தும் நிலையத்துக்கு அனுப்பி தலைமுடியை திருத்திய பின் அதற்குரிய கட்டணத்தை வசூலித்திருக்க முடியும்.
இதனால் மாணவர்கள் இனி பாடசாலை செல்ல முடியாது என அழுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இவற்றை தவிர்த்து மாணவர்களையும் பெற்றோர்களையும் இழிவுபடுத்தும் செய்கையை வன்மையாக கண்டிப்பதுடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதில் பெற்றோர்களின் அக்கறையின்மையும் காரணமாக இருக்கின்றது என்பதை குறிப்பிட வேண்டும்.
– கஜன் தனராஜ்


