நேற்று மாலை (19) பண்டாரவளை குற்றப் தடுப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 5877 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 11545 மில்லிகிராம் கஞ்சாவுடன் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும் கஞ்சா மற்றும் ஹெரோயின் வைத்திருந்த 12 பேரும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்
